

சின்சினாட்டி,
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்கா வில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இத்தாலி வீரர் பிளவியோ கோபோலி 2-6. 6-3, 6-4 என்ற செட் கணக்கில் டாமி பாலை (அமெரிக்கா) வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஆர்துர் பில்ஸ் (பிரான்ஸ்) தன்னை எதிர்த்த தியாகோ அகஸ்டினை (அர்ஜென்டினா) 6-3, 6-2 என்ற நேர் செட்டில் வீழ்த்தினார். அரையிறுதியில் ஆர்துல் பில்ஸ், கோபோலியை சந்திக்கிறார்.
பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் எலினா ரைபகினா (கஜகஸ்தான்).இகா ஸ்வியாடெக்குடன் (போலந்து) மல்லுகட்டினார். முதல் செட்டில் ரைபகினா 1-4 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த போது இடது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். இதனால் ஸ்வியாடெக் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.