சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: முதல் வீராங்கனையாக ஸ்வியாடெக் இறுதிப்போட்டிக்கு தகுதி


சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: முதல் வீராங்கனையாக ஸ்வியாடெக் இறுதிப்போட்டிக்கு தகுதி
x

image courtesy:twitter/@CincyTennis

அரையிறுதியில் ரைபகினா - ஸ்வியாடெக் மோதினர்.

சின்சினாட்டி,

பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றின் முதல் ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக் (போலந்து) - ரைபகினா (கஜகஸ்தான்) ஆகியோர் மோதினர்.

முன்னணி வீராங்கனைகள் இருவர் மோதியதால் இந்த ஆட்டத்தில் அனல் பறந்தது. இருப்பினும் ஸ்வியாடெக் 7-5 மற்றும் 6-3 என்ற நேர் செட் கணக்கில் ரைபகினாவை வீழ்த்தி முதல் வீராங்கனையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

1 More update

Next Story