டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி: இந்திய அணி அறிவிப்பு


டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி:  இந்திய அணி அறிவிப்பு
x

கோப்புப்படம்

தினத்தந்தி 26 July 2025 9:15 AM IST (Updated: 26 July 2025 9:15 AM IST)
t-max-icont-min-icon

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் உலக குரூப்1 முதலாவது சுற்றில் இந்திய அணி, சுவிட்சர்லாந்தை சந்திக்கிறது.

புதுடெல்லி,

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் உலக குரூப்1 முதலாவது சுற்றில் இந்திய அணி, சுவிட்சர்லாந்தை சந்திக்கிறது. இந்த ஆட்டம் சுவிட்சர்லாந்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் செப்டம்பர் 12-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணி அடுத்த ஆண்டுக்கான டேவிஸ் கோப்பை போட்டியின் தகுதி சுற்றுக்கு முன்னேறும்.

இதற்கான இந்திய டென்னிஸ் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் ஒற்றையரில் இந்திய 'நம்பர் ஒன்' வீரர் சுமித் நாகல் இடம் பிடித்துள்ளார். அவர் 2 ஆண்டுக்கு பிறகு அணிக்கு திரும்பி இருக்கிறார். மேலும் ஒற்றையரில் கரண் சிங், ஆர்யன் ஷா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

தமிழக வீரர் ராம்குமார் நீக்கப்பட்டுள்ளார். இதே போல் இரட்டையர் பிரிவில் யுகி பாம்ப்ரி - ஸ்ரீராம் பாலாஜி இணைக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மாற்று வீரர்களாக தக்சினேஷ்வர் சுரேஷ், சசிகுமார் முகுந்தும், இரட்டையரில் ரித்விக் போலிபள்ளியும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

1 More update

Next Story