

புதுடெல்லி,
டெல்லியில் உள்ள ஜிம்கானா கிளப்பில் புல் தரையில் டேவிஸ் கோப்பை 2022 உலக கோப்பை போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், முதல் நாளான இன்று நடந்த ஒற்றையர் ஆடவர் போட்டியில், இந்தியாவின் ஆடவர் ஒற்றையர் வீரர்களில் தரவரிசையில் முன்னணியில் உள்ள ராம்குமார் ராமநாதன் (170வது இடம்), டென்மார்க்கின் கிறிஸ்டியன் சிக்ஸ்கார்டு (824வது இடம்) உடன் விளையாடினார்.
இந்த போட்டியில், 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி டென்மார்க்கின் மிக்கேல் தோர்ப்பிகார்டை 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இதனால், டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் டென்மார்க்கிற்கு எதிராக 2-0 என்ற புள்ளி கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.