அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியை நேரில் கண்டு ரசித்த தோனி

அரையிறுதில் அல்காரஸ் - ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியை நேரில் கண்டு ரசித்த தோனி
Published on

நியூயார்க்,

'கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான செர்பியாவின் ஜோகோவிச், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் உடன் மோதினார். இதில் ஜோகோவிச் 6-3,7-5, 3-6 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளார். அரையிறுதில் அல்காரஸ் - ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

இந்த நிலையில், ஜோகோவிச் விளையாடிய இந்த காலிறுதி போட்டியை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி நேரில் கண்டு ரசித்தார் . இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது . 

X

Daily Thanthi
www.dailythanthi.com