ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: மெட்வதேவ் தோல்வி.. அரையிறுதியில் ஜோகோவிச்- பிரிட்ஸ் மோதல்

நாளை நடைபெறும் அரையிறுதி போட்டியில் ஜோகோவிச்- டெய்லர் பிரிட்ஸ் மோதுகின்றனர்.
Image Courtesy: AFP 
Image Courtesy: AFP 
Published on

துரின்,

உலக தரவரிசையில் முன்னணியில் இருக்கும் டாப்-8 வீரர்கள் மட்டும் பங்கேற்கும் ஏ.டி.பி. பைனல்ஸ் எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்கள் ரெட், கிரீன் என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் நோவக் ஜோகோவிச், ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், ஆண்ட்ரே ரூப்லெவ் மற்றும் டேனில் மெட்வதேவ் ஆகியோர் 'ரெட்' பிரிவிலும், ரபேல் நடால், காஸ்பர் ரூட், பெலிக்ஸ் ஆகர்-அலியாசிம் மற்றும் டெய்லர் பிரிட்ஸ் ஆகியோர் 'கிரீன்' பிரிவிலும் இடம்பெற்றுள்ளனர்.

ஒவ்வொரு பிரிவில் உள்ள வீரர்கள், தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீரர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் வீரர்கள் அரைஇறுதிக்கு தகுதி பெறுவார்கள். அந்த வகையில் நோவக் ஜோகோவிச், டெய்லர் பிரிட்ஸ் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டனர்.

இந்த நிலையில் ரெட் பிரிவில் இன்று நடந்த போட்டியில் நோவக் ஜோகோவிச் (செர்பியா)- டேனில் மெட்வதேவ் (ரஷியா) மோதினர். இந்த போட்டியில் ஜோகோவிச் 6-3, 6-7 (5-7), 7-6 (7-2) என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றார். இதன் மூலம் லீக் சுற்றில் 3 தோல்விகளை சந்தித்து மெட்வதேவ் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். நாளை நடைபெறும் அரையிறுதி போட்டியில் ஜோகோவிச்- டெய்லர் பிரிட்ஸ் மோதுகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com