

பாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அடுத்த மாதம் (நவம்பர்) 2-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை பிரான்சில் நடக்கிறது. இந்த போட்டியில் இருந்து நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான 33 வயதான நோவக் ஜோகோவிச் (செர்பியா) விலகியுள்ளார்.
அதற்கு பதிலாக 26-ந்தேதி முதல் நவம்பர் 1-ந்தேதிவரை வியன்னாவில் நடக்கும் போட்டியிலும், நவம்பர் 15-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை லண்டனில் நடக்கும் ஏ.டி.பி. இறுதி சுற்றிலும் கலந்து கொள்ள முடிவு செய்திருப்பதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.