

துபாய்,
துபாய் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா 6-3, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் 15-ம் நிலை வீராங்கனை கிளாரா டாசனை (டென்மார்க்) வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார்.
தோகாவில் நடந்து வரும் கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் ரஷிய வீரர் ஆந்த்ரே ரூப்லெவ் 6-3, 7-6 (7-2) என்ற நேர்செட்டில் சிட்சிபாஸ்சை (கிரீஸ்) தோற்கடித்து அரைஇ றுதியை எட்டினார்.