சீனாவில் நடைபெற இருந்த முக்கிய டென்னிஸ் போட்டிகள் ரத்து

சீனாவில் நடைபெற இருந்த முக்கிய டென்னிஸ் போட்டிகள் ரத்து செய்யப்பட உள்ளன.
சீனாவில் நடைபெற இருந்த முக்கிய டென்னிஸ் போட்டிகள் ரத்து
Published on

பெய்ஜிங்,

கொரோனா பெருந்தொற்று நோய் காரணமாக உலக அளவில் முன்னணி விளையாட்டு தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில போட்டிகள் நடைபெறும் தேதியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், நடப்பாண்டு சீனாவில் நடைபெற இருந்த டென்னிஸ் போட்டிகள் அனைத்தும் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏடிபி(ATP) மற்றும் டபிள்யூடிஏ (WTA) ஆகிய டென்னிஸ் விளையாட்டு அமைப்புகளும், நடப்பாண்டு சீனாவில் நடைபெற இருந்த டென்னிஸ் போட்டிகள் ரத்து செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சீனாவின் ஷென்ஸன் நகரில், டபிள்யூடிஏ போட்டியின் இறுதி ஆட்டமும் நடைபெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com