அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடருக்கு முன்னதாக புதிய பயிற்சியாளரை நியமித்த எம்மா ராடுகானு

சாம்பியன் பட்டத்தை தக்கவைக்க எம்மா ராடுகானு புதிய பயிற்சியாளருடன் சேர்ந்து யுக்திகளை வகுக்க கூடும்.
Image Tweeted By @EmmaRaducanu
Image Tweeted By @EmmaRaducanu
Published on

லண்டன்,

இங்கிலாந்து நாட்டின் முன்னணி இளம் டென்னிஸ் வீராங்கனை எம்மா ராடுகானு. இவர் தனது புதிய பயிற்சியாளராக டிமிட்ரி டர்சுனோவை நியமித்துள்ளார். 19 வயதான ராடுகானு சோதனை அடிப்படையில் டர்சுனோவுடன் இணைந்து பணியாற்றி வருவதை இங்கிலாந்து செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

முன்னாள் ஏடிபி வீரரான டிமிட்ரி டர்சுனோ இதற்கு முன் எலெனா வெஸ்னினா, அரினா சபலெங்கா மற்றும் அனெட் கொன்டவீட் ஆகியோரின் பயிற்சியாளராக இருந்துள்ளார். அடுத்த மாத இறுதியில் யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி தொடங்குகிறது.

கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் தனது 18 வயதில் பட்டம் வென்று பிரபலமானவர் எம்மா ராடுகானு. இதனால் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் என்ற பட்டத்தை தக்கவைக்க அவர் புதிய பயிற்சியாளருடன் சேர்ந்து யுக்திகளை வகுக்க கூடும். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com