பயிற்சியாளரை மீண்டும் பிரிந்த எம்மா ரடுகானு- கடந்த ஒரு வருடத்தில் 4-வது முறையாக முடிவு..!!

எம்மா ரடுகானு தனது தற்போதைய பயிற்சியாளர் டோர்பென் பெல்ட்சை பிரிவதாக அறிவித்துள்ளார்.
Image Courtesy : Twitter @EmmaRaducanu
Image Courtesy : Twitter @EmmaRaducanu
Published on

லண்டன்,

கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்று பிரபலமானவர் எம்மா ரடுகானு.19 வயதே ஆன எம்மா ரடுகானு கனடாவில் பிறந்தவர். ஆனால் சிறு வயது முதலே பிரிட்டன் நாட்டிற்காக டென்னிஸ் விளையாடி வருகிறார்.

தகுதி சுற்றின் மூலம் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிக்கு தகுதி பெற்ற இவர் அந்த தொடரில் முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி இறுதி போட்டியில் பட்டம் வென்றார். நேற்று முன்தினம் உலகின் உயரிய விளையாட்டு விருதுகளில் ஒன்றான லாரஸ் விருதை எம்மா ரடுகானு பெற்றார்.

கடந்த ஐந்து மாதங்களாக டோர்பென் பெல்ட்ஸ் என்பவர் இவருக்கு பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் தற்போது எம்மா ரடுகானு டோர்பென் பெல்ட்சை பிரிவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து எம்மா ரடுகானு கூறுகையில், "டோர்பென் பெல்ட்ஸ் சிறந்த மனிதர். நாங்கள் ஒன்றாக இருந்த காலத்தில் எங்களுக்குள் இருந்த புரிதல்களை நான் ரசித்து இருக்கிறேன். கடந்த அரை வருடத்திற்கு மேலாக டோர்பனின் பயிற்சி, தொழில்முறை மற்றும் அர்ப்பணிப்புக்காக நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு வருடத்தில் எம்மா ரடுகானு 4-வது முறையாக தனது பயிற்சியாளரை பிரிந்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com