பிரெஞ்சு ஓபன்: முதன்முறையாக கால் இறுதிக்கு தகுதி பெற்ற அன்னா கலின்ஸ்காயா

இதற்கு முன்பு அவர் 2024-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் கால் இறுதிக்கு தகுதி பெற்றிருந்தார்.
பிரெஞ்சு ஓபன்: முதன்முறையாக கால் இறுதிக்கு தகுதி பெற்ற அன்னா கலின்ஸ்காயா
Published on

பாரிஸ் ,

பாரிஸில் நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில், ரஷ்ய வீராங்கனை அன்னா கலின்ஸ்கயா தனது கெரியரில் முதன்முறையாக பிரெஞ்சு ஓபன் கால் இறுதிக்குத் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளார்.

நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டத்தில் சகநாட்டு வீராங்கனை அனஸ்தாசியா பொட்டாபோவாவை 6-4, 2-6, 7-6(7) என்ற செட் கணக்கில் போராடி வீழ்த்தினார்.

கால் இறுதிக்கு முன்னேற்றம்

முதல் செட்டில் 1-4 என பின்தங்கியிருந்த கலின்ஸ்காயா, அதன்பின் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர்ந்து புள்ளிகளை குவித்து 6-4 என அந்த செட்டைக் கைப்பற்றினார்.

ஆனால் இரண்டாவது செட்டில் ஆதிக்கம் செலுத்திய பொடபோவா, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று போட்டியை சமநிலைக்கு கொண்டு வந்தார். வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி செட் டை-பிரேக்கிற்கு சென்றது. டை-பிரேக்கில் கலின்ஸ்காயா வென்று கால் இறுதிக்கு முன்னேறினார்.

கிராண்ட் ஸ்லாமில் மேலும் ஒரு மைல்கல்

இந்த வெற்றியின் மூலம், கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் இரண்டாவது முறையாக கால் இறுதிக்கு முன்னேறியுள்ளார் அன்னா கலின்ஸ்காயா. இதற்கு முன்பு அவர் 2024-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் கால் இறுதிக்குத் தகுதி பெற்றிருந்தார்.

அரையிறுதி வாய்ப்புக்காக அடுத்த சவால்

காலிறுதி ஆட்டத்தில், பிரான்ஸ் வீராங்கனை டயான் பாரி அல்லது போலந்து வீராங்கனை மாஜா ச்வாலின்ஸ்கா ஆகியோரில் ஒருவரை கலின்ஸ்காயா எதிர்கொள்ள உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com