பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேற்றம்

இகா ஸ்வியாடெக், கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ரைபகினா உடன் மோதினார்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேற்றம்
Published on

பாரீஸ்,

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற 4வது சுற்றில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ரைபகினா உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய  இகா ஸ்வியாடெக் 1-6, 6-3,7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் அவர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com