பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; இகா ஸ்வியாடெக் அரையிறுதிக்கு முன்னேற்றம்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பாரீஸ்,

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து), உக்ரைனின் எலினா ஸ்விடோலினா உடன் மோதினார்.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்ட இகா ஸ்வியாடெக் 6-1, 7-5 என்ற செட் கணக்கில் எலினா ஸ்விடோலினாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். வரும் 5ம் தேதி நடைபெறும் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இகா ஸ்வியாடெக், பெலாரஸின் அரினா சபலென்காவை எதிர்கொள்கிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com