பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; ஜானிக் சின்னெர் அரையிறுதிக்கு முன்னேற்றம்


பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; ஜானிக் சின்னெர் அரையிறுதிக்கு முன்னேற்றம்
x

கோப்புப்படம் 

ஜானிக் சின்னெர் (இத்தாலி), கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக் உடன் மோதினார்.

பாரீஸ்,

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஜானிக் சின்னெர் (இத்தாலி), கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக் உடன் மோதினார்.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜானிக் சின்னெர் 6-1, 7-5, 6-0 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் பப்ளிக்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

1 More update

Next Story