பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: லோயிஸ் போய்சன் அரையிறுதிக்கு முன்னேற்றம்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பாரீஸ்,

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான மிர்ரா ஆண்ட்ரீவா (ரஷியா), பிரான்சின் லோயிஸ் போய்சனை எதிர்கொண்டார்.

இந்த போட்டியில் எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட மிர்ரா ஆண்ட்ரீவா 6-7 (6-8), 3-6 என்ற செட் கணக்கில் லோயிஸ் போய்சனிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்.

வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறிய லோயிஸ் போய்சன், அரையிறுதியில் கோகோ காபை சந்திக்கிறார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com