பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: நடப்பு சாம்பியன் நடால் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் நடால் 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: நடப்பு சாம்பியன் நடால் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்
Published on

பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், இன்று நடந்த ஆடவர் ஒற்றையர் 3வது சுற்று போட்டியில் நடப்பு சாம்பியன் ரபேல் நடால் மற்றும் இங்கிலாந்து நாட்டின் கேமரூன் நார்ரீ ஆகியோர் விளையாடினர்.

இதில், முதல் செட்டில் 3 புள்ளிகளை இழந்த நடால் அதன்பின்பு அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார். முதல் செட்டை 6-3 என கைப்பற்றினார். கேமரூனுக்கு எந்த வாய்ப்பும் கிடைக்காத வகையில், தொடர்ந்து அடுத்தடுத்த செட்களில் வெற்றி பெற்றார்.

இதனால், 6-3, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் நடால், கேமரூனை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதேபோன்று மற்றொரு போட்டியில் உலக தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் உள்ள ஜோகோவிக் 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com