ஹாலே ஓபன் டென்னிஸ்; ஜானிக் சின்னெர் அதிர்ச்சி தோல்வி


ஹாலே ஓபன் டென்னிஸ்; ஜானிக் சின்னெர் அதிர்ச்சி தோல்வி
x

கோப்புப்படம்

ஜானிக் சின்னெர் (இத்தாலி), கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக் உடன் மோதினார்.

பெர்லின்,

பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ள ஹாலெ ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது.

இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஜானிக் சின்னெர் (இத்தாலி), கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் சின்னெர் கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற அடுத்த செட்களில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அலெக்சாண்டர் பப்ளிக் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஜானிக் சின்னெருக்கு அதிர்ச்சி அளித்தார்.

இறுதியில் அலெக்சாண்டர் பப்ளிக் 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஜானிக் சின்னெரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். தோல்வி கண்ட சின்னெர் தொடரில் இருந்து வெளியேறினார்.

1 More update

Next Story