ஐ.டி.எப். பெண்கள் ஓபன் டென்னிஸ்: இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

ஐ.டி.எப். பெண்கள் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

பெங்களூரு, 

ஐ.டி.எப். பெண்கள் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 241-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா 6-1, 6-1 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீராங்கனை ருதுஜா போசேல்லை விரட்டியடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு அரைஇறுதியில் உலக தரவரிசையில் 163-வது இடத்தில் உள்ள செக்குடியரசு வீராங்கனை பிரன்டா புருவிர்தோவா 7-6 (7-2), 6-2 என்ற நேர்செட்டில் சுலோவேனியாவின் டாலிலா ஜாகுபோவிச்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் அங்கிதா ரெய்னா-பிரன்டா புருவிர்தோவா மோதுகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com