

பெங்களூரு
கர்நாடகாவின் பெங்களூரு நகரில் ஐ.டி.எப். மகளிர் ஓபன் டபிள்யூ100 டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் ஜப்பானின் மாய் ஹோந்தமாவை எதிர்த்து, 21 வயதுடைய இந்திய வீராங்கனை வைஷ்ணவி அத்கர் விளையாடினார்.
போட்டியின், முதல் செட்டை 6-2 என்ற புள்ளி கணக்கில் ஹோந்தமா எளிதில் கைப்பற்றி வைஷ்ணவிக்கு அதிர்ச்சி ஏற்படுத்தினார். ஆனால், 2-வது செட்டில் உஷாரான வைஷ்ணவி, அதிரடியாக விளையாடி ஒரு கட்டத்தில் 3-0 என முன்னிலை பெற்றார். எனினும் பின்னர் 3-2 என ஹோந்தமாவும் அதிரடி காட்டினார்.
ஆனால், தொடர்ந்து, திறமையாக விளையாடி 2-வது செட்டை 6-4 என வைஷ்ணவி அத்கர் கைப்பற்றினார். இதனால் வெற்றியை முடிவு செய்யும் 3-வது செட்டில் பரபரப்பு காணப்பட்டது. எனினும் 7-6(8) என்ற புள்ளி கணக்கில் அந்த செட்டை வைஷ்ணவி கைப்பற்றி காலிறுதிக்கு முன்னேறி உள்ளார்.