

ஸ்டட்கர்ட்,
ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் ஜெர்மனியில் ஸ்டட்கர்ட் நகரில் நடைபெற்று வந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் பெலாரஸைச் சேர்ந்த முன்னணி வீராங்கனையான சபலென்காவுடன் மோதினார்.
1 மணி 24 நிமிடங்கள் இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய இகா ஸ்வியாடெக், 6-2, 6-2 என்ற செட் கணக்கில் சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
இதன்மூலம் ஸ்வியாடெக் தனது 7-வது டபிள்யூ.டி.ஏ டூர் ஒற்றையர் பட்டத்தை வென்றார்.