இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஓய்வு பெறுவதாக அறிவிப்பு..!

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார்.
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஓய்வு பெறுவதாக அறிவிப்பு..!
Published on

ஐதராபாத்,

இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா 2003-ம் ஆண்டு முதல் இந்தியாவிற்காக விளையாடி வருகிறார். இதுவரை 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். 14-வது ஆஸ்திரேலியன் ஓப்பன் டென்னிஸ் போட்டிகளில் கலந்துகொண்டிருக்கும் சானியா மிர்சா 19 வருடங்களாக விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் ஆஸ்திரேலியன் ஓப்பன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் முதல் சுற்றில் கலந்துகொண்டார் சானியா மிர்சா. பெண்கள் இரட்டையர் பிரிவில் நடந்த அரை இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா - உக்ரைனின் நாடியா கிச்னோக் இணை ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி - ஸ்டோர்ம் சான்டெர்ஸ் ஜோடியுடன் மோதியது. இதில் சானியா மிர்சா ஜோடி தோல்வி அடைந்தது.

இதை தொடர்ந்து சானியா மிர்சா டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

சானியா மிர்சா கூறும் போது இனி நான் விளையாடப்போவதில்லை. இதற்கு சில காரணங்கள் இருக்கிறது. காயத்திலிருந்து முன்பைப்போல் மீண்டு வர எனது உடல் ஒத்துழைக்கவில்லை. எனது உடல் அதன் வலுவை இழக்க தொடங்கியிருக்கிறது.

நான் எங்கு சென்றாலும் எனது மூன்று வயது மகனை உடன் அழைத்து செல்வதன் மூலம் அவனுடைய ஆரோக்கியத்தை அபாயத்திற்குள்ளாக்குகிறேன். இந்த சீசன் முடியும் வரை நான் விளையாடுவேன். கடின உழைப்பால் எனது உடல் எடையை குறைத்து, இளம்தலைமுறை தாய்மார்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்திருக்கிறேன்' என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com