

இண்டியன்வெல்ஸ்,
பி.என்.பி பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டிகள் அமெரிக்காவின் இண்டியன்வெல்சில் நடந்து வருகின்றன.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதி போட்டியில், போலந்து நாட்டு வீராங்கனை இகா ஸ்வியாடெக் மற்றும் கிரீஸ் வீராங்கனை மரியா சக்கரி மோதினர்.
இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே அதிரடி காட்டிய இகா ஸ்வியாடெக் 6-4, 6-1 என்ற செட் கணக்கில் மரியா சக்கரியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.