இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: அரைஇறுதியில் நடால்

அரைஇறுதி போட்டியில் ரபேல் நடால், அல்காரஸ்சை சந்திக்கிறார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

இண்டியன்வெல்ஸ்,

பி.என்.பி.பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில், உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 7-6 (7-0), 5-7, 6-4 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் நிக் கைர்ஜியோஸ்சை போராடி வீழ்த்தி அரைஇறுதியை எட்டினார். இந்த ஆட்டம் 2 மணி 46 நிமிடம் நீடித்தது. நடால் இந்த ஆண்டில் தொடர்ச்சியாக பெற்ற 19-வது வெற்றி இதுவாகும்.

மற்றொரு கால்இறுதியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் 6-4, 6-3 என்ற நேர்செட்டில் இங்கிலாந்தின் கேமரூன் நோரியை விரட்டியடித்தார். அரைஇறுதியில் நடால், அல்காரஸ்சை சந்திக்கிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com