இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் ஷரபோவா அதிர்ச்சி தோல்வி

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டியில் ஷரபோவா அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் ஷரபோவா அதிர்ச்சி தோல்வி
Published on

இண்டியன்வெல்ஸ்,

அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், 2 முறை சாம்பியனுமான மரிய ஷரபோவா(ரஷியா) 4-6, 4-6 என்ற நேர் செட்டில் நவ்மி ஒசாகாவிடம் (ஜப்பான்) அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். குழந்தை பெற்ற பிறகு ஓய்வில் இருந்த அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்சும் இந்த போட்டியில் பங்கேற்கிறார். அவர் முதல் சுற்றில் ஜரினா டையாசை (கஜகஸ்தான்) எதிர்கொள்கிறார்.

இதன் ஆண்கள் பிரிவில் தகுதி சுற்றின் 2-வது ரவுண்டில் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி, சக நாட்டவரும், தமிழகத்தை சேர்ந்தவருமான ராம்குமாரை 6-4, 6-2 என்ற நேர் செட்டில் வீழ்த்தி பிரதான சுற்றை எட்டினார். யுகி பாம்ப்ரி முதல் சுற்றில் பிரான்சின் நிகோலஸ் மகுத்துடன் மல்லுகட்டுகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com