இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் எலீனா ரைபகினா...!

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரில் எலீனா ரைபகினா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
Image Courtesy: @WeAreTennisITA
Image Courtesy: @WeAreTennisITA
Published on

ரோம்,

இத்தாலியன் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் கஜகஸ்தான் வீராங்கனை எலீனா ரைபகினாவும், உக்ரைன் வீராங்கனை அன்ஹெலினா கலினினாவும் மோதினர்.

இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் ரைபகினா எளிதில் கைப்பற்றினார். இதையடுத்து நடைபெற்ற 2வது செட்டில் 1-0 என ரைபகினா முன்னிலையில் இருந்த போது அன்ஹெலினா கலினினாவுக்கு காயம் ஏற்பட்டதால் அவர் போட்டியில் இருந்து வெளியேறினார்.

கலினினா போட்டியில் இருந்து வெளியேறிய காரணத்தால் ரைபகினா இத்தாலியன் ஓபன் டென்னிசில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com