காயம் காரணமாக விலகிய இத்தாலி வீரர்: ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேற்றம்

காலிறுதி ஆட்டம் ஒன்றில் செர்பியாவின் ஜோகோவிச், இத்தாலி வீரர் லோரென்சோ முசெட்டி, மோதினர்.
காயம் காரணமாக விலகிய இத்தாலி வீரர்: ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேற்றம்
Published on

மெல்போர்ன்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர், ஒவ்வோர் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும். இதன்படி, இதன்படி, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் கடந்த 18-ந்தேதி இந்த டென்னிஸ் போட்டி தொடர் தொடங்கியது. தொடர்ந்து பிப்ரவரி 1-ந்தேதி வரை போட்டிகள் நடைபெறும்இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் செர்பியாவின் ஜோகோவிச், இத்தாலி வீரர் லோரென்சோ முசெட்டி, மோதினர்

இந்த ஆட்டத்தில் முதல் 2 செட்டுகளை முசெட்டி சிறப்பாக விளையாடி வென்றார். அடுத்து ஒரு செட்டை கைப்பற்றினால் அரையிறுதிக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் தொடர்ந்து விளையாடிய முசெட்டி காயம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.இதனால் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு ஜோகோவிச் தகுதி பெற்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com