மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் சபலென்கா, ஸ்வியாடெக்

அரினா சபலென்கா பெய்டான் ஸ்டர்ன்சை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் சபலென்கா, ஸ்வியாடெக்
Published on

மாட்ரிட்,

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேரடியாக 2-வது சுற்றில் களம் கண்ட முன்னாள் சாம்பியனான இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-1, 6-2 என்ற நேர் செட்டில் தகுதிநிலை வீராங்கனையான டாரியா ஸ்னிகுரை (உக்ரைன்) வெறும் 61 நிமிடங்களில் ஊதித் தள்ளினார். 'நம்பர் ஒன்' நட்சத்திரம் அரினா சபலென்கா (பெலாரஸ்) 7-5, 6-3 என்ற நேர் செட்டில் பெய்டான் ஸ்டர்ன்சை (அமெரிக்கா) தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன் னேறினார். ஜாஸ்மின் பாவ்லினி (இத்தாலி), கலினினா (உக்ரைன்), டயானா ஸ்னைடர் (ரஷியா), நவோமி ஒசாகா (ஜப்பான்), பெலின்டா பென்சிச் (சுவிட்சர்லாந்து) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்றனர். அதே சமயம் 7-ம் நிலை வீராங்கனையான எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) 3-6, 4-6 என்ற நேர் செட்டில் ஹங்கேரியின் அன்ன போன்டாரிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் ஸ்பெயினின் ஜாமி முனார் 6-4, 6-1 என்ற நேர் செட்டில் ஷிவ்சென்கோவை (கஜகஸ்தான்) வீழ்த்தி 2-வது சுற்றை எட்டினார். அமெரிக்காவின் மார்ட்டின் டேம் தன்னை எதிர்த்த அலெக்சி பாப்ரினை (ஆஸ்திரேலியா) 7-6 (9-7), 6-4 என்ற செட் கணக்கில் விரட்டினார். மற்றொரு ஆட்டத்தில் முன்னணி வீரர் கிரிகோர் டிமிட்ரோவ் (பல்கேரியா) 4-6, 4-6 என்ற நேர் செட்டில் டேனியல் வாலெஜோவிடம் (பராகுவே) சரண் அடைந்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com