மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: மரின் சிலிச், ஈலா வெற்றி

ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் குரோஷியாவின் மரின் சிலிச், ஜிசோவ் பெர்க்சை வீழ்த்தினார்.
மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: மரின் சிலிச், ஈலா வெற்றி
Published on

மாட்ரிட்,

பிரெஞ்சு ஓபனுக்கு முன்னோட்டமாக களிமண் தரையில் நடக்கும் மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நேற்று தொடங்கியது. ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் குரோஷியாவின் மரின் சிலிச் 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஜிசோவ் பெர்க்சை (பெல்ஜியம்) வீழ்த்தினார். மற்ற ஆட்டங்களில் டாமி ஜூம்ஹர் (போஸ்னியா) 6-2, 6-4 என்ற நேர் செட்டில் மேட்டியா பெலுக்சியையும் (இத்தாலி), டினோ பிரிஸ்மிக் (குரோஷியா) 6-3, 6-4 என்ற செட் கணக்கில் இத்தாலியின் பெரேட் டினியையும், ஜன் லெனர்ட் ஸ்ரப் (ஜெர்மனி) 7-6(3), 6-0 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் முல்லரையும் (பிரான்ஸ்) தோற்கடித்து 2-வது சுற்றை எட்டினர்.

பெண்கள் பிரிவின் முதலாவது சுற்றில் ஜினெப் சோன்மெஸ் (துருக்கி) 7-5, 6-2 என்ற நேர் செட் கணக்கில் கார்லோட்டா மார்ட்டினஸ் சிரெசை (ஸ்பெயின்) வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். அமெரிக்காவின் அலிசியா பார்க்ஸ் 6-3, 6-2 என்ற நேர் செட்டில் காக்சியாரெட்டோவை (இத்தாலி) வென்றார். அலெக்சாண்ட்ரா ஈலா (பிலிப்பைன்ஸ்) 6-3, 6-3 என்ற செட் கணக்கில் பாவ்லிசென்கோவாவை (ரஷியா) விரட்டினார்.

முன்னதாக முன்னாள் 'நம்பர் ஒன்' வீராங்கனையான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 2-6, 4-6 என்ற நேர் செட்டில் ஸ்பெயினின் கேட்லின் குவிடோவிடம் பணிந்தார். வீனஸ் தொடர்ச்சியாக சந்தித்த 10-வது தோல்வி இதுவாகும். 45 வயதிலும் தொடர்ந்து விளையாட ஆர்வம் காட்டும் வீனஸ் வில்லியம்ஸ் அடுத்து பிரெஞ்சு ஓபனில் இறங்க திட்டமிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com