

மாட்ரிட்,
மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 3-வது சுற்று ஆட்டத்தில் 'நம்பர் ஒன்' வீரர் ஜானிக் சினெர் (இத்தாலி) 6-2, 6-3 என்ற நேர் செட்டில் எல் மெர் மோலரை (டென்மார்க்) வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் இத்தகைய மாஸ்டர்ஸ் டென்னி சில் அவர் தொடர்ச்சியாக ருசித்த 24-வது வெற்றி இதுவாகும்.
மற்றொரு ஆட்டத்தில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் 6-2, 7-5 என்ற நேர் செட்டில் 11-ம் நிலை வீரர் அலெக்சாண்டர் பப்ளிக்கை (கஜகஸ்தான்) துரத்தினார். லோரென்ஜோ முசெட்டி (இத்தாலி), ஜிரி லெஹக்கா (செக்குடியரசு), மார்ட்டின் எட்செவ்வரி (அர்ஜென்டினா) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.
பெண்கள் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் கோகோ காப் 4-6, 7-5, 6-1 என்ற செட் கணக்கில் சோரனா கிர்ஸ்டியாவை (ருமேனியா) தோற்கடித்து 4-வது சுற்றுக்குள் நுழைந்தார். உக்ரைனின் மார்த்தா கோஸ்ட்யுக் 6-1, 6-4 என்ற நேர் செட் டில் 5-ம் நிைல வீராங்கனை அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவுக்கு அதிர்ச்சி அளித்தார். கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), நவோமி ஒசாகா (ஜப்பான்), சோலனா சியரா (அர்ஜென்டினா) உள்ளிட்டோரும் 3-வது தடையை வெற்றிகரமாக கடந்தனர்.