ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: முதல் சுற்று ஆட்டத்தில் அல்காரஸ் வெற்றி

ஸ்பெயினின் அல்காரஸ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் உடன் மோதினார்.
ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: முதல் சுற்று ஆட்டத்தில் அல்காரஸ் வெற்றி
Published on

துரின்,

உலகின் டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஆண்டின் இறுதியில் நடத்தப்படுகிறது. இதன்படி 56-வது ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் இன்று தொடங்கியநடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 வீரர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு வீரரும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீரர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் வீரர்கள் அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயினின் அல்காரஸ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய அல்காரஸ் 7-6 (7-5), 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார் .

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com