ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்; இரட்டையர் பிரிவில் மீண்டும் தோல்வி கண்ட போபண்ணா இணை

ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் உள்ள துரின் நகரில் நடைபெற்று வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

துரின்,

உலகின் டாப்-8 முன்னணி வீரர்கள் (ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு) மட்டும் பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் உள்ள துரின் நகரில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் இணை, சால்வடோரனின் மார்செலோ அரேவாலோ - குரோஷியாவின் மேட் பாவிக் இணையுடன் மோதியது.

இந்த போட்டியில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட போபண்ணா இணை 5-7, 3-6 என்ற செட் கணக்கில் சால்வடோரனின் மார்செலோ அரேவாலோ - குரோஷியாவின் மேட் பாவிக் இணையுடன் தோல்வி கண்டது. போபண்ணா இணை ஏற்கனவே ஆண்ட்ரியா வவசோரி - சிமோன் பொலேல்லி இணையுடன் தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com