மியாமி ஓபன் டென்னிஸ்; கோகோ காப் அதிர்ச்சி தோல்வி

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புளோரிடா,

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 சுற்று (காலிறுதிக்கு முந்தைய சுற்று) ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான கோகோ காப், போலந்தின் மக்தா லினெட் உடன் மோதினார்.

இந்த போட்டியில் அனுபவம் வாய்ந்த கோகோ காப் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் போலந்தின் மக்தா லினெட்டிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com