மியாமி ஓபன் டென்னிஸ்: தொடர்ந்து 2-வது முறையாக வெற்றி பெற்று சபலென்கா சாதனை

கோகோவை 6-2, 4-6, 6-3 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார்.
மியாமி ஓபன் டென்னிஸ்:  தொடர்ந்து 2-வது முறையாக வெற்றி பெற்று சபலென்கா சாதனை
Published on

மியாமி

அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில் உலக தர வரிசையில் 4-ம் இடம் வகிக்கும் கோகோ காப் மற்றும் அரைனா சபலென்கா விளையாடினர்.

முதல் செட்டை 6-2 என்ற புள்ளி கணக்கில் சபலென்கா எளிதில் வென்றார். ஆனால், 2-வது செட்டில் கோகோ சவாலான முறையில் விளையாடி 4-6 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார். இதனால், போட்டி 3-வது செட்டை நோக்கி சென்றது.

Also Read
நீர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய தருணம்: பிரதமர் மோடி பேச்சு
மியாமி ஓபன் டென்னிஸ்:  தொடர்ந்து 2-வது முறையாக வெற்றி பெற்று சபலென்கா சாதனை

இந்த செட்டை 6-3 என்ற புள்ளி கணக்கில் சபலென்கா கைப்பற்றினார். இதனால், ஒட்டுமொத்தத்தில் கோகோவை 6-2, 4-6, 6-3 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார். இதனால், மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில், தொடர்ந்து 2-வது முறையாக வெற்றி பெற்று சபலென்கா சாதனை படைத்துள்ளார். ஸ்டெபி கிராப், கிம் கிளைஸ்டர்ஸ், விக்டோரியா அசரென்கா மற்றும் இகா ஸ்வியாடெக் ஆகியோரை தொடர்ந்து இந்த சாதனையை படைத்த 5-வது வீராங்கனை என்ற பெருமையை சபலென்கா பெற்றுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com