மியாமி ஓபன் டென்னிஸ்; அடுத்த சுற்றுக்கு முன்னேறிய யூகி பாம்ப்ரி ஜோடி

யூகி பாம்ப்ரி - நுனோ போர்ஜஸ் ஜோடி, ரோகன் போபண்ணா- இவான் டோடிக் ஜோடியுடன் மோதியது.
புளோரிடா,
மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் (ரவுண்ட் ஆப் 32 சுற்றில்) இந்தியாவின் யூகி பாம்ப்ரி-போர்ச்சுக்கலின் நுனோ போர்ஜஸ் ஜோடி, ரோகன் போபண்ணா-குரோசியாவின் இவான் டோடிக் ஜோடியுடன் மோதியது.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய யூகி பாம்ப்ரி ஜோடி 6-4 , 3-6 , 10-7 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





