மான்டி கார்லோ டென்னிஸ்: இறுதிப்போட்டியில் அல்காரஸ் - முசெட்டி மோதல்


மான்டி கார்லோ டென்னிஸ்: இறுதிப்போட்டியில் அல்காரஸ் - முசெட்டி மோதல்
x

மான்டி கார்லோ டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது.

மான்டி கார்லோ,

மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டம் ஒன்றில் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) 7-6 (7-2), 6-4 என்ற நேர் செட்டில் சக நாட்டு வீரரான டேவிடோவிச் போகினாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலி வீரர் முசெட்டி 1-6, 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் முசெட்டி- அல்காரஸ் மோதுகின்றனர்.

1 More update

Next Story