மான்டி கார்லோ டென்னிஸ் தொடர் நிறைவு: புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு


மான்டி கார்லோ டென்னிஸ் தொடர் நிறைவு: புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு
x

கோப்புப்படம்

வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலில் மாற்றமில்லை.

புதுடெல்லி,

மான்டி கார்லோ டென்னிஸ் தொடர் கடந்த 13-ம் தேதியுடன் நிறவடைந்தது. இதில் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்நிலையில் சர்வதேச டென்னிஸ் சங்கம் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் இத்தாலியின் ஜானிக் சினெர் முதலிடத்தில் தொடருகிறார். மான்டி கார்லோ மாஸ்டர் டென்னிசில் மகுடம் சூடிய ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 3-வது இடத்துக்கு சரிந்துள்ளார். அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் 4-வது இடத்திலும், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 5-வது இடத்திலும் நீடிக்கிறார்கள்.

இதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக இத்தாலி வீரரான முசெட்டி 5 இடங்கள் உயர்ந்து 11-வது இடத்தை பெற்றுள்ளார்.

வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலில் டாப் 10 இடங்களில் மாற்றமில்லை. அரினா சபலென்கா முதலிடத்தில் தொடருகிறார்.

1 More update

Next Story