மான்டி கார்லோ டென்னிஸ்: முன்னணி வீரரான நடால் விலகல்

களிமண் தரையில் நடக்கும் மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் மொனாக்கோவில் நாளை தொடங்குகிறது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

மான்டி கார்லோ,

களிமண் தரையில் நடக்கும் மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் மொனாக்கோவில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டியில் இருந்து முன்னாள் நம்பர் ஒன் வீரரான 37 வயதான ரபெல் நடால் (ஸ்பெயின்) கடைசி நேரத்தில் விலகியுள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூக வலைத்தள பதிவில், விளையாட்டை பொறுத்தவரை இது எனக்கு கடினமான தருணம். எனது உடல் ஒத்துழைக்காததால், மான்டி கார்லோ போட்டியில் விளையாடப் போவதில்லை. இது போன்ற போட்டிகளில் ஆட முடியாமல் போவதால் ஏற்படும் ஏமாற்றத்தை எப்படி வெளிப்படுத்துவது என்றே தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை 11 முறை மான்டி கார்லோ பட்டத்தை வென்றுள்ள அவர் கடந்த ஆண்டு முதல் காயம் காரணமாக பல போட்டிகளில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். இதனால் தரவரிசையில் 649-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அடுத்த மாதம் நடக்கும் பிரெஞ்சு ஓபனிலும் களம் காண்பது சந்தேகம் தான்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com