பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி; 4வது சுற்றுக்கு முகுருஜா முன்னேற்றம்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் ஸ்டோசரை வீழ்த்தி ஸ்பெயின் வீராங்கனை முகுருஜா 4வது சுற்றுக்கு முன்னேறினார்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி; 4வது சுற்றுக்கு முகுருஜா முன்னேற்றம்
Published on

பாரீஸ்,

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் இன்றைய மகளிர் பிரிவு ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர் மற்றும் ஸ்பெயின் நாட்டின் கார்பைன் முகுருஜா ஆகியோர் விளையாடினர்.

கடந்த 2016ம் ஆண்டு நடந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் மற்றும் உலக தர வரிசையில் முதல் இடத்தில் இருந்த செரீனா வில்லியம்சை வீழ்த்தி பட்டம் வென்றவரான முகுருஜா, முதல் செட்டை 6க்கு பூஜ்யம் என்ற கணக்கில் தன்வசப்படுத்தினார்.

தொடர்ந்து 2வது செட்டிலும் தொடக்கத்தில் 2க்கு பூஜ்யம் என்ற கணக்கில் முகுருஜா முன்னிலை பெற்றார். ஸ்டோசர் 2-2 என அதனை சமன்படுத்தினார்.

ஆனால் அடுத்தடுத்த புள்ளிகளை கைப்பற்றி 6-2 என்ற கணக்கில் 2வது செட்டையும் தன்வசப்படுத்தி ஸ்டோசருக்கு அதிர்ச்சியளித்த முகுருஜா 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இந்த போட்டியில் பெற்ற வெற்றி பற்றி முகுருஜா கூறும்பொழுது, கிராண்ட் ஸ்லாம் சாம்பியனான ஸ்டோசர் கடும் போட்டியாளராக இன்று விளையாடினார். எனது சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தவில்லை எனில் வெற்றி பெறுவது கடினம் என எனக்கு தெரியும் என கூறியுள்ளார்.

அடுத்து அவர் உக்ரைன் நாட்டின் லெசியா டிசூரென்கோவுடன் 4வது சுற்றில் விளையாட உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com