பிரெஞ்சு ஓபன், விம்பிள்டனை தவறவிடுகிறார் முகுருஜா - டென்னிசில் இருந்து சில மாதங்கள் ஒதுங்கி இருக்க முடிவு

ஸ்பெயின் வீராங்கனை முகுருஜா மேலும் சில மாதங்கள் டென்னிசில் இருந்து ஒதுங்கி இருக்க முடிவு செய்துள்ளார்.
பிரெஞ்சு ஓபன், விம்பிள்டனை தவறவிடுகிறார் முகுருஜா - டென்னிசில் இருந்து சில மாதங்கள் ஒதுங்கி இருக்க முடிவு
Published on

மாட்ரிட்,

முன்னாள் 'நம்பர் ஒன்' டென்னிஸ் வீராங்கனை கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) கடந்த ஜனவரி 30-ந்தேதிக்கு பிறகு எந்த போட்டியிலும் விளையாடவில்லை. இந்த ஆண்டில் இதுவரை ஆடிய 4 ஆட்டங்களிலும் தோல்வியே சந்தித்து இருக்கிறார். இதனால் தரவரிசையில் 132-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

இந்த நிலையில் 29 வயதான முகுருஜா மேலும் சில மாதங்கள் டென்னிசில் இருந்து ஒதுங்கி இருக்க முடிவு செய்துள்ளார். 'குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவது அற்புதமானது. இந்த ஓய்வு உடல் ஆரோக்கியத்துக்கும், புத்துணர்ச்சிக்கும் உதவுகிறது. இன்னும் சில காலம் அதாவது அடுத்து வரும் களிமண் மற்றும் புல்தரை போட்டி சீசன் முடியும் வரை இந்த ஓய்வை தொடர முடிவு செய்துள்ளேன்' என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் அவர் மே 28-ந்தேதி பாரீசில் தொடங்கும் பிரெஞ்சு ஓபன் மற்றும் ஜூலையில் நடைபெறும் விம்பிள்டன் ஆகிய இரண்டு கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகளை தவற விடுவது உறுதியாகியுள்ளது. முகுருஜா 2016-ம் ஆண்டில் பிரெஞ்சு ஓபனையும், 2017-ம் ஆண்டில் விம்பிள்டன் பட்டத்தையும் வென்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com