வாஷிங்டன் ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் தோல்வி கண்ட ரைபகினா

வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்று வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

வாஷிங்டன்,

வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான எலினா ரைபகினா (கஜகஸ்தான்), கனடாவின் லெய்லா பெர்னாண்டஸ் உடன் மோதினார்.

இந்த மோதலில் எளிதில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட ரைபகினா யாரும் எதிர்பார்க்கா வண்ணம் 7-6 (7-2), 6-7 (3-7), 6-7 (3-7) என்ற செட் கணக்கில் லெய்லா பெர்னாண்டஸிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com