துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் பவுலினி சாம்பியன்

இறுதிப்போட்டியில் ரஷிய வீராங்கனை அன்னா கலின்ஸ்கயா, இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினியுடன் மோதினார்.
ஜாஸ்மின் பவுலினி (image courtesy: wta twitter)
ஜாஸ்மின் பவுலினி (image courtesy: wta twitter)
Published on

துபாய்,

துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ரஷிய வீராங்கனை அன்னா கலின்ஸ்கயா, இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினியுடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஜாஸ்மின் பவுலினி 4-6, 7-5, 7-5 என்ற செட் கணக்கில் அன்னாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் தரவரிசையில் 26-வது இடத்தில் இருக்கும் பவுலினி, அடுத்த வாரம் முதல் முறையாக முதல் 20 இடங்களுக்குள் நுழைவார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com