பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: டெய்லர் பிரிட்ஸ் அதிர்ச்சி தோல்வி

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

பாரீஸ்,

பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா) - கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக் உடன் மோதினார்.

இந்த மோதலில் எளிதில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட டெய்லர் பிரிட்ஸ் யாரும் எதிர்பார்க்கா வண்ணம் 6-7 (5-7), 2-6 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் பப்ளிக் இடம் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com