ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ்: பட்டம் வென்றார் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன்...!

ஏடிபி சேலஞ்சர் இறுதிப் போட்டிகளில் முதல்முறையாக ஒற்றையர் பட்டத்தை ராம்குமார் ராமநாதன் வென்றுள்ளார்
ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ்: பட்டம் வென்றார் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன்...!
Published on

மனாமா ,

ஏடிபி மனாமா சேலஞ்சர் டென்னிஸ் தொடர் பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் கடந்த வாரம் தொடங்கியது. இதன் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் , ரஷ்யாவின் கார்லோவ்ஸ்கியை எதிர்கொண்டார்.

போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ராம்குமார் முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் கைப்பற்றினார் . இரண்டாவது சேட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றிய ராம்குமார் , ரஷ்யாவின் கார்லோவ்ஸ்கியை நேர் செட் கணக்கில் வீழ்த்தினார்.

27 வயதான ராம்குமார், இதற்கு முன்பு ஆறு ஏடிபி சேலஞ்சர் இறுதிப் போட்டிகளில் பங்கேற்று தோல்வி அடைந்து இருந்தார். இந்த நிலையில் நேற்று நடந்த போட்டியின் மூலம் தனது முதல் ஏடிபி சேலஞ்சர் நிலை ஒற்றையர் பட்டத்தை ராம்குமார் ராமநாதன் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com