டேவிஸ் கோப்பை போட்டியில் இருந்து விடைபெறும் ரோகன் போபண்ணா - வெற்றியுடன் விடைகொடுக்க சக வீரர்கள் தீவிரம்

ரோகன் போபண்ணாவுக்கு அகில இந்திய டென்னிஸ் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
Image Courtesy : @AITA__Tennis
Image Courtesy : @AITA__Tennis
Published on

லக்னோ,

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா-மொராக்கோ அணிகள் இடையிலான ஆட்டம் லக்னோவில் இன்று தொடங்குகிறது. இதில் நாளை நடைபெறும் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-யுகி பாம்ப்ரி இணை, எலியாட் பென்செட்ரிட்-யோனிஸ் லலாமி லாரோஸ்சி ஜோடியை சந்திக்கிறது.

இந்திய அணியின் மூத்த வீரரான 43 வயதான ரோகன் போபண்ணாவுக்கு இது தான் கடைசி டேவிஸ் கோப்பை போட்டியாகும். எனவே அவருக்கு வெற்றியுடன் விடைகொடுக்க சக வீரர்கள் தீவிரம் காட்டுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. 2002-ம் ஆண்டில் இந்திய அணிக்காக அறிமுகமான ரோகன் போபண்ணா இதுவரை 32 ஆட்டங்களில் ஆடி 22-ல் வெற்றி கண்டுள்ளார்,

டேவிஸ் கோப்பை போட்டியில் இருந்து விடைபெறும் ரோகன் போபண்ணாவுக்கு அகில இந்திய டென்னிஸ் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதில் அகில இந்திய டென்னிஸ் சங்க தலைவர் அனில் ஜெயின், பொதுச் செயலாளர் அனில் துபார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் இரு அணிகளின் வீரர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com