

லண்டன்,
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த அரையிறுதி ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதி போட்டியை நேரில் கண்டு ரசித்தார்.
தொடர்ந்து டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரரை சச்சின் சந்தித்தார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் லாராவும் உடனிருந்தார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.