4 ஆண்டுகளுக்கு பிறகு டென்னிஸ் களத்திற்கு திரும்புகிறார் செரீனா வில்லியம்ஸ்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் மீண்டும் டென்னிஸ் கோர்ட்டில் களமிறங்குவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
4 ஆண்டுகளுக்கு பிறகு டென்னிஸ் களத்திற்கு திரும்புகிறார் செரீனா வில்லியம்ஸ்
Published on

சென்னை,

டென்னிஸ் வரலாற்றில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்த அமெரிக்காவின் முன்னாள் நம்பர்-1 வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், 2022-ம் ஆண்டில் தொழில்முறை டென்னிஸில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அவரது ஓய்வு அறிவிப்பு உலக டென்னிஸ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மீண்டும் களமிறங்கும் செரீனா

இந்த நிலையில், 2022-ல் எடுத்த ஓய்வு முடிவை திரும்பப் பெற்று மீண்டும் போட்டி டென்னிஸில் விளையாட போவதாக செரீனா வில்லியம்ஸ் அறிவித்துள்ளார்.

குயீன்ஸ் கிளப் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பு

லண்டனில் இம்மாதம் நடைபெறவுள்ள குயீன்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் தொடரில் செரீனா வில்லியம்ஸ் பங்கேற்க உள்ளார். இந்த தொடரின் இரட்டையர் பிரிவில் அவர் களமிறங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் மீண்டும் டென்னிஸ் கோர்ட்டில் களமிறங்குவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com