விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி?- சானியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சோயப் மாலிக்

இன்று 36வது பிறந்தநாள் கொண்டாடும் சானியா மிர்சாவுக்கு சோயப் மாலிக் இன்ஸ்டாகிராமில் வாழ்த்து கூறியுள்ளார்.
Image Instagrammed by realshoaibmalik 
Image Instagrammed by realshoaibmalik 
Published on

கராச்சி,

இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் ஆகிய இருவரும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இருவரும் காதலித்து கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில், 2018ம் ஆண்டு இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

அண்மையில் சானியா மிர்சாவின் இன்ஸ்டாகிராம் பதிவு, சானியா - சோயப் மாலிக் ஜோடியின் பிரிவை உணர்த்தும் சமிக்ஞையாக இருந்தது. "உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன? அல்லாவைக் காண" என்று சானியா பதிவிட்டிருந்தார். சானியா மிர்சாவின் இந்த பதிவு விவாகரத்து சர்ச்சையை எழுப்பியது.

இதற்கிடையில், மாலிக் மற்றும் மிர்சாவின் திருமண வாழ்க்கை விரிசலுக்கு முக்கிய காரணம் பாகிஸ்தான் மாடல் ஆயிஷா உமர் என்று கூறப்பட்டது. ஆயிஷாவுடனான அவரது நெருக்கமே மிர்சாவுடனான அவரது திருமண வாழ்க்கை விரிசலுக்கு வழிவகுத்தது என்று வதந்திகள் பரவின.

இதை தொடர்ந்து சானியா மிர்சா - சோயப் மாலிக் தம்பதி அதிகாரப்பூர்வமாக விவாகரத்து செய்து பிரிந்துவிட்டதாக மாலிக்கின் நெருக்கமான வட்டாரம் தெரிவித்தாக தகவல் வெளியானது.

இந்த தகவல் இரு நாட்டு விளையாட்டு ரசிகர்களுக்கும் பெரும் வேதனையாக இருந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் தொலைகாட்சி ஒன்றில் மிர்சா - மாலிக் என்ற நிகழ்ச்சியை இருவரும் இணைந்து தொகுத்து வழங்கவுள்ளதாக தகவல் வெளியானது.

சானியா மிர்சா - சோயப் மாலிக் ஜோடி விவாகரத்து பெற்றுவிட்டதாக தகவல் பரவிய நிலையில், இருவரும் இணைந்து தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இன்று 36வது பிறந்தநாள் கொண்டாடும் சானியா மிர்சாவுக்கு சோயப் மாலிக் இன்ஸ்டாகிராமில் வாழ்த்து கூறியுள்ளார். இருவரும் இணைந்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஷோயப் மாலிக், பிறந்தநாள் வாழ்த்துக்கள் சானியா மிர்சா.. ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வாழ்த்துக்கள். பிறந்தநாளான இன்று மகிழ்ந்திருக்குமாறு வாழ்த்தியுள்ளார்.

View this post on Instagram

இதன் மூலம் சானியா மிர்சா மாலிக் தம்பதியின் விவாகரத்து வதந்திகளுக்கு சோயப் மாலிக் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக இருநாட்டு ரசிகர்களும் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com