

புதுடெல்லி
ஓராண்டிற்கு முன்னால் தேசிய விளையாட்டு கூட்டமைப்பு என்ற பெயரில் இதே அமைப்பு அங்கீகாரம் கோரியதை மத்திய அரசு நிராகரித்தது. மேலும் அகில இந்திய டென்னிஸ் கூட்டமைப்பின் அங்கீகாரத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்திருந்தது. அதற்கு காரணமாக மத்திய அரசு வகுத்துள்ள விளையாட்டு நெறிமுறைகளை அக்கூட்டமைப்பு மீறியது சுட்டிக்காட்டப்பட்டது.
அக்கூட்டமைப்பு முறையாக தேர்தல்களை நடத்தாமல் அனில் கன்னா என்பவரை தலைவராக நீடிக்க முயன்றதை விளையாட்டுத் துறைக்கான அமைச்சகம் ஒப்புக்கொள்ளவில்லை. கன்னா ஏற்கனவே இருமுறை தலைவராக பதவி வகித்து விட்டு மீண்டும் 2012 ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டது விளையாட்டு நெறிமுறைகளுக்கு எதிரானதாக இருப்பதை விளையாட்டுத் துறை சுட்டிக்காட்டியது. அதனை அடுத்து 2016 ஆம் ஆண்டில் கன்னா பதவி விலகியதை அடுத்து பிரவீண் மகாஜன் எனும் முன்னாள் வருவாய்த்துறை குடிமைப்பணி அதிகாரியை கூட்டமைப்பு தனது செயற்குழு டிசம்பரில் தேர்வு செய்தது. பின்னர் நடந்த பிப்ரவரியில் நடந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் மகாஜனின் நியமனம் 2020 ஆம் ஆண்டு வரையில் நீடிக்க அனுமதி வழங்கியது.
இந்நிலையில் அகில இந்திய டென்னிஸ் கூட்டமைப்பிற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.