ரோட்டர்டேம் டென்னிஸ் தொடர்; இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் கிரேக்க வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ்

நெதர்லாந்தின் ரோட்டர்டேம் நகரில் நடைபெற்று வரும் ஏடிபி டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு கிரேக்க நாட்டின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் முன்னேறி உள்ளார்.
ரோட்டர்டேம் டென்னிஸ் தொடர்; இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் கிரேக்க வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ்
Published on

ரோட்டர்டேம்,

நெதர்லாந்தின் ரோட்டர்டேம் நகரில் நடைபெற்றுவரும் ஏடிபி டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு டென்னிஸ் தரவரிசையில் உலகின் நான்காம் நிலை வீரராக உள்ள கிரேக்க நாட்டின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் முன்னேறி உள்ளார். அவர் அரைஇறுதி போட்டியில் 4-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் செக் குடியரசின் ஜிரி லெஹெக்காவை வீழ்த்தினார். இதன்மூலம் அவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

அவர் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் கனடாவை சேர்ந்த பெலிக்ஸ் ஆகர்-அலியாசிமை எதிர்கொள்ள உள்ளார்.

இவர்கள் இருவரும் டென்னிஸ் தொடர்களின் இறுதிப்போட்டிகளில் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதி உள்ளனர். அவற்றில் சிட்சிபாஸ் 5 முறை வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com